Paristamil Navigation Paristamil advert login

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கைதி - வழிபிதுங்கும் காவற்துறை!

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கைதி - வழிபிதுங்கும் காவற்துறை!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:12 | பார்வைகள் : 2255


இல்-து-பிரான்சில் கைதிகள் தப்பியோடுவது தொடர்கதையாக உள்ளது.

எசொனில் இருக்கும் Fleury-Mérogis(Essonne) சிறைச்சாலையில் இருந்து கைதிகளை,  கடந்த செப்டெம்பர் 12ம் திகதி, Fontainebleau (Seine-et-Marne)  காட்டிற்கு கூட்டிச் சென்ற வேளை, இரண்டு கைத்திகள் தப்பியோடியிருந்தனர்.

தொடர்ச்சியான தேடுதலில் இதில் ஒருவர் மட்டுமே பந்தனில் (Pantin-Seine-Saint-Denis) வைத்துக் கைது செய்யப்பட்டிருக்க மற்றைய கைதி இருக்கும் இடம் தெரியாது மறைந்துள்ளார்.

இப்படி மற்றைய சிறைச்சாலைகளில் இருந்தும் தப்பித்தல் தொடர்ந்துள்ளது.

இதே வேளை நேற்று,  வல்து மார்னில் இருக்கும் Fresnes (Val-de-Marne) சிறைச்சாலையில் இருந்து மொஹமத் A. எனும் கைதியை அதில் இருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கிரெம்ளன் - பிசெத்ர் (Kremlin-Bicêtre) வைத்தியசாலைக்குக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து நள்ளிரவில் காவற்துறையினர் சென்றிருந்த வேளை  வைத்தியசாலையில் இருந்து இந்தக் கைதியும் தப்பியோடி உள்ளார்.

வைத்திசாலையின் நோயாளி உடையிலேயே தப்பித்திருக்கும் மொஹமத்தினை உடனடியாக அந்தச் சுற்றுவட்டாரத்தில் காவற்துறையினர் தேடுதல் நடாத்தியும் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.

போதைப்பெருட் கடத்தலினால் கைது செய்யப்பட்டு, தற்காலிகச் சிறையில் தீர்ப்பிற்காகக் காத்திருக்கும் கைதி என்பதால், முக்கிய பாதுகாப்பு எதுவும் கொடுக்கவில்லை எனக் கூறியிருக்கும் காவற்துறையினர், தொடர்ச்சியான தப்பிதலினால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மக்களோடு மக்களாகக் கலந்து, ஆபத்தான கைதிகள் கூட உலாவும் அளவிற்கே சிறைத்துறையும் காவற்துறையும் உள்ளது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்