Paristamil Navigation Paristamil advert login

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து... 6 பேர் பலி 

சிம்பாப்வேயில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து... 6 பேர் பலி 

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:40 | பார்வைகள் : 3930


சிம்பாப்வேயில் தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில்  6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகசிம்பாப்வேயின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 

சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேவுக்கு மேற்கு பகுதியில் 100 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள செகுடு பகுதியில் உள்ள பே ஹார்ஸ் தங்கச் சுரங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (29)காலை இடிந்து விழுந்தது.

இதில் 30க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ளதோடு பதின்மூன்று சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சிம்பாப்வே சுரங்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பும் அதன் பொதுச் செயலாளரும், செகுடு சுரங்கத் தொழிலாளர் சங்கத் தலைவரும் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் கடோமா நகருக்கு அருகிலுள்ள சில்வர் மூன் மற்றும் கிரிக்கெட் சுரங்கங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய விபத்தில் பல சுரங்கத் தொழிலாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சிம்பாப்வேயில் சுரங்க வேலைகளின் போது தொழிலாளர்கள் பாதுகாப்பு புறக்கணிக்கப்படுவதாகவும்,  சுரங்க வேலைகளின் போது தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக துரித நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்