Paristamil Navigation Paristamil advert login

தாய்வானின் நீர்மூழ்கிகள் : பாதுகாப்பு முஸ்தீபா ? போருக்கான தயார்ப்படுத்தலா?

தாய்வானின் நீர்மூழ்கிகள் : பாதுகாப்பு முஸ்தீபா ? போருக்கான தயார்ப்படுத்தலா?

1 ஐப்பசி 2023 ஞாயிறு 09:42 | பார்வைகள் : 2006


நீர்­மூழ்கிக் கப்பல் என்­றாலே எப்­போதும் சல­ச­லப்புத் தான். சத்­த­மின்றி கட­லுக்குள் பய­ணிக்க வேண்டும். அவ்­வாறே அது வடி­வ­மைக்­கப்­ப­டு­கி­றது.

எப்­போது நீர்­மூழ்கி பற்றி உச்­ச­ரிக்­கப்­ப­டு­கி­றதோ, அப்­போ­தெல்லாம் அர­சியல் அரங்கில் சல­ச­லப்பு ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது. சரி­யாக, தாய்­வானின் ‘ஹைய்க்குன்’ நீர்­மூழ்­கியைப் போல.

கடந்த வியா­ழக்­கி­ழமை தாய்வான் ஜனா­தி­பதி நீர்­மூழ்­கியை உல­குக்கு காட்­டினார். ‘இது எது­வித உத­வியும் இன்றி நாமே தயா­ரித்­தது’ என்றார்.

தாய்வான் தேசியக் கொடியின் இலச்­சினை பொறிக்­கப்­பட்ட நீர்­மூழ்கி. அதன் முன்னால் நின்று, இந்த நாளை வர­லாறு மறக்­காது என்று பெருமை பேசினார்.

அவர் பெரு­மைப்­பட காரணம் இருந்­தது. ஆற்றல் படைத்த நீர்­மூழ்­கி­யொன்றைத் தயா­ரிப்­பது அவ்­வ­ளவு எளி­தான காரியம் அல்ல.

ஒரு நாட்டின் படைப்­ப­லத்தில் வலு­வான நீர்­மூழ்கி சேரு­கின்­றது என்றால் அது லேசுப்­பட்ட விட­யமும் அல்ல.

புனைவு இலக்­கி­யத்தில் விப­ரிக்­கப்­படும் இராட்­சத மீன். பறக்கும் ஆற்றல் அதன் இன்­னொரு பலம். அதன் பெயர் ’ஹைய்க்குன்’.

அந்தப் பெயர் தாய்வான் நிர்­மா­ணித்த நீர்­மூழ்­கிக்கு இடப்­பட்­டதில் ஆச்­சரியம் இல்லை. எழு­பது அடி நீளம். தயா­ரிப்புச் செலவு 154 கோடி டொலர்கள்.

தாய்­வா­னிடம் மூன்று நீர்­மூழ்­கிகள் உண்டு. இரண்டு நீர்­மூழ்­கிகள் கொஞ்சம் பழை­யவை. டச்சு மாதி­ரியில் உரு­வாக்­கப்­பட்­டவை. மற்­றை­யது அமெ­ரிக்கா வழங்­கி­யது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்­தைய வடி­வத்தைக் கொண்­டது. இந்த நீர்­மூழ்கி பயிற்­சிக்­காக மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­படும்.

ஹைய்க்­குனைத் தவிர, இன்­னொரு நீர்­மூழ்­கி­யையும் அமைத்­தது, 2027இற்குள் கடற்­ப­டையில் சேர்க்கும் திட்டம் தாய்­வா­னுக்கு உண்டு. அடுத்து வரும் ஆண்­டு­களில் எட்டு நீர்­மூழ்­கி­களைக் கொண்­ட­தாக படை­வ­லுவை அதி­க­ரிக்கும் திசையில் தாய்வான் நகர்­கி­றது.

படைப்­ப­லத்தில் சேர்க்­கப்­படும் நீர்­மூழ்கி, தாக்­கு­த­லுக்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் அல்­லது அந்­நிய படை­களின் தாக்­கு­தலில் இருந்து நாட்டை பாது­காக்க பயன்­ப­டுத்­தப்­படக் கூடும். இத்­தனை நீர்­மூழ்­கிகள் மூலம் தாய்வான் எதிர்ப்­பார்ப்­பது என்ன? பாது­காப்பா? தாக்­கு­தலா?

ஹைய்க்குன் நீர்­மூழ்­கியை அறி­மு­கப்­ப­டுத்­திய சமயம், அதைப் பற்றி ஜனா­தி­பதி த்சாய் இங்-வென் எத­னையும் சொல்­ல­வில்லை.

நீர்­மூழ்­கி­களை உரு­வாக்கும் திட்­டத்­திற்குப் பொறுப்­பான மேல­தி­காரி தெளி­வாகச் சொன்னார். அவர் பகை­யா­ளியின் பெயரை தெளி­வாக உச்­ச­ரித்தே பேசினார்.

தமது நாட்டை ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கா­கவோ, தமது கடற்­ப­டையை முடக்­கு­வ­தற்­கா­கவோ தமது தீவு-­தே­சத்தை சீனா சுற்றி வளைக்க முனை­யு­மானால், அதனைத் தடுப்­ப­தற்­காக நாம் நீர்­மூழ்­கி­களை உரு­வாக்­கு­கின்றோம் என்று அவர் குறிப்­பிட்டார்.

நீர்­மூழ்கி வெள்­ளோட்டம் விடப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கவே இந்தக் கருத்­துக்கு சீனா­விடம் இருந்து பதி­லடி கிடைத்­தது.

பசுபிக் கடலில் சீனாவின் கடற்­படை செயற்­பா­டு­களைத் தடுக்க நினைப்­பது முட்­டாள்­தனம் என்று சீன பாது­காப்பு அமை­ச்சு கூறி­யது. சீனாவின் அரச ஊட­கமோ, தாய்வான் பகற்­க­னவு காணு­கி­றது என்­றது.

இந்த வார்த்தைப் போர், இரு தரப்­பு­க­ளுக்கு இடை­யி­லான மர­பு­வழி யுத்­தத்­திற்கு வழி­வ­குக்­குமா என்­பது பிர­தான கேள்வி. பதி­ல­ளிப்­ப­தற்கு சற்றுக் கடி­ன­மான கேள்வி எனலாம்.

தாய்­வா­னுக்கும், சீனா­வுக்கும் இடை­யி­லான பகை­யு­ணர்வை இரு பரி­மா­ணங்­களில் விப­ரிக்­கலாம். முத­லா­வ­தாக வர­லாற்று ரீதி­யி­லான பரி­மாணம். அடுத்து சர்­வ­தேச அர­சியல் சார்ந்த பரி­மாணம்.

சீனாவின் பெரு­நி­லப்­பிற்கு அப்பால் 100 மைல் தொலைவில் உள்ள தீவு தான், தாய்வான். போர்­மோசா நீரிணை அப்­பா­லுள்ள சீன பெரு­நி­லப்­ப­ரப்பில் இருந்து மாறு­பட்ட அர­சி­ய­லையும், மொழி­யையும், கலா­சா­ரத்­தையும் கொண்ட தீவு எனலாம்.

தமது ஒரே சீனா என்ற கொள்­கைக்குள் தாய்வான் ஒரு பாகம் மாத்­தி­ரமே என்­பது சீனாவின் நிலைப்­பாடு. தாய்­வானை வேறு நாடாக அங்­கீ­க­ரிப்­ப­தில்லை.

தாய்­வானில் ஜன­நா­யக ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்­பிற்கு உட்­பட்ட ஒற்­றை­யாட்­சியைக் கொண்ட அர­சியல் யாப்பு ரீதி­யான குடி­ய­ரசு உள்­ளது.

இதனை சீனாவின் கம்­யூ­னிஸ ஆட்­சி­யா­ளர்கள், சீன அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்கும் சட்­ட­பூர்­மான அர­சாக பார்க்­கி­றார்கள்.

ஆனால், தாய்­வானை தமது பெரு­நி­லப்­ப­ரப்­புடன் ஐக்­கி­யப்­ப­டுத்த வேண்டும் என்­பது சீனாவின் மாறாத நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

ஒன்­று­ப­டுத்தல் தவிர்க்க முடி­யாத விஷ­ய­மாக இருந்­தாலும், அதற்­காக படைப்­ப­லத்தைப் பிர­யோ­கிக்கத் தேவை­யில்லை என்­பதும் சீனாவின் அர­சியல் நிலைப்­பாடு.

தாய்­வானின் நிலைப்­பாடு அதன் அர­சியல் கட்­சி­களில் தங்­கி­யுள்­ளது.

1992இல், சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் பிர­தி­நி­திகள், அப்­போது தாய்­வானை ஆட்சி செய்த க்வொன்­மிந்தாங் கட்­சி­யு­டன் உடன்­பாட்டை எட்­டி­னார்கள். இந்த உடன்­பாட்­டுக்கு தாய்வான் கட்­டுப்­பட வேண்டும் என சீனா வலி­யு­றுத்­து­கி­றது.

தாய்வான் நீரி­ணைக்கு அப்­பாலும், இப்­பாலும் இருப்­பவை ஒரே சீனா­விற்கு சொந்­த­மா­னவை தான். இவ்­விரு தரப்­புக்­களும் ஒன்­று­ப­டு­தலை நோக்கி நகர வேண்டும் என்­ப­தையே உடன்­பாடு குறிப்­பி­டு­கி­றது என்று சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் வலி­யு­றுத்­து­கிறார். ஆனால், இன்று தாய்­வானில் இருப்­பது க்வொன்­மிந்தாங் கட்­சியின் ஆட்சி அல்ல. இதன் போட்டிக் கட்­சி­யாகத் திகழும் ஜன­நா­யக முன்­னேற்றக் கட்சி தலை­மை­யி­லான ஆட்­சியே.

இயன்­ற­ளவில், தாய்வான் சுதந்­திர நாடாகத் திகழ வேண்­டு­மென பின்­னைய கட்சி விரும்­பு­கி­றது. இந்தக் கட்­சியின் தலைவி தான் தாய்­வானின் ஜனா­தி­ப­தி­யா­கவும் இருக்­கிறார்.

1992 ஆம் ஆண்டு எட்­டிய உடன்­பாட்டை ஜனா­தி­பதி த்சாய் இங்-வென் அங்­கீ­க­ரிப்­ப­தில்லை. இன்­னொரு உடன்­ப­டிக்­கையின் மூலம் தாய்­வானை சுதந்­திரம் நோக்கி நகர்த்த வேண்­டு­மென அவர் கூறு­கிறார்.

சுதந்­திரப் பிர­க­டனம் நோக்­கிய நகர்வில் தாய்வான் எல்லை மீறிச் செல்லும் சம­யத்தில் ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் அமைதி வழியில் ஒன்­றி­ணைப்­பது என்ற நிலைப்­பாட்டைக் கைவிட்டு படைப்­ப­லத்தைப் பிர­யோக்­கிலாம். அதற்­கான சாத்­தி­யக்­கூ­றுகள் மிகவும் தெளி­வா­கவே இருக்­கின்­றன.

சர்­வ­தேச அர­சியல் என்ற கோணத்தில் பார்த்தால், தாய்­வா­னுக்கு ஐக்­கிய நாடுகள் சபையில் அங்­கத்­துவம் கிடை­யாது. அதற்கு சீனா அனு­ம­திப்­ப­தில்லை.

சர்­வ­தேச அர­சி­யலில் சீனாவின் ஆதிக்­கத்­திற்கு சிறு உதா­ர­ணத்தைக் கூறலாம்.

கொவிட் பெருந்­தொற்றை சமா­ளிக்க முடி­யாமல் முழு உல­கமும் அவ­திப்­பட்ட வேளையில், தாய்வான் சிறப்­பாக செயற்­பட்­டது. தனது அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள தாய்வான் முன்­வந்­த­போது, உலக சுகா­தார ஸ்தாப­னத்தில் தாய்வான் தனி­யாக பங்­கேற்­ப­தற்கு சீனா அனு­ம­திக்­க­வில்லை.

இதே மாதி­ரி­யாக, பாது­காப்பு ரீதி­யா­கவும் சீனா தாய்­வானின் மீது ஆதிக்கம் செலுத்தி வரு­வதைக் காணலாம்.

தாய்­வானின் வான்­ப­ரப்பை சீன போர் விமா­னங்கள் ஊடு­ரு­வு­வதும், போர்­மோசா நீரி­ணைக்கு அதிக போர்க் கப்­பல்கள் செல்­வதும், தாய்வான் கப்­பல்­களை சீனா கரை­யோரக் காவல் படை தடுத்து நிறுத்­து­வதும் அடிக்­கடி நடக்கும் சம்­ப­வங்கள்.

தாய்­வானில் எப்­போ­தெல்லாம் தேசிய உணர்வைக் கிளர்ந்­தெழச் செய்யும் சம்­ப­வங்கள் நடை­பெ­று­கின்­ற­னவோ, அப்­போ­தெல்லாம் சீனாவின் ஊரு­டு­வல்­களும், ஆதிக்­கமும் அதி­க­ரிக்கும்.

ஒரு கொந்­த­ளிப்­பான நிலை ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில், அமைதி வழியில் தாய்­வானை ஒன்­றி­ணைத்தல் என்­பதைத் தாண்டி, தமது நாட்டை சீனப்­ப­டைகள் சுற்றி வளைக்­கலாம் என்ற தாய்வான் ஜனா­தி­பதி கரு­து­கிறார்.

இப்­ப­டி­யா­ன­தொரு சந்­தர்ப்­பத்தில், சீனாவை சமா­ளிப்­ப­தற்­காக படைப்­ப­லத்தை அதி­க­ரிக்கும் நோக்கில், த்சாய் இங்-வென் அம்­மையார் வலு­வான நீர்­மூழ்­கி­களைத் தயா­ரிக்­கிறார் என்று கருத முடியும்.

இந்த விட­யத்தில் அவர் தெளி­வா­கவே இருக்­கிறார். சீனாவின் படைப்­ப­லத்­துடன் ஒப்­பி­டு­கையில், பெரும் இராட்­ச­தனை எதிர்­கொள்ள வேண்­டிய குள்ள மனி­தனைப் போன்றே தாய்வான் இருக்­கி­றது.

தாக்க வேண்டும் என்று சீனா நினைத்து விட்டால், அந்தத் தாக்­கு­தலை தாய்­வானால் தனியாக சமாளிக்க முடியாது.

சீனாவின் பகையாளி நாடுகள் என்ற ரீதியிலும், மேற்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க நினைக்கும் நாடுகள் என்ற ரீதியிலும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் தாய்வானுக்கு உதவியாக வரலாம்.

இந்தப் பிராந்தியத்தில், அதிகார வலுச்சமநிலையை தாண்டி ஆராய்ந்தாலும், சர்வதேச வர்த்தக அரங்கில் தாய்வானுக்கு முக்கியத்துவம் உண்டு. முழு உலகிற்கும் கணினி உதிரிப் பாகங்களை ஏற்றுமதிச் செய்து பொருளாதார ரீதியில் சிறப்பாகத் திகழ்வதால் சர்வதேச சமூகம் கைவிட மாட்டாதென த்சாய் இங்-வென் கருதுகிறார்.

இத்தகைய சந்தர்ப்பத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பை தாமதப்படுத்த தாம் தயாரிக்கும் வலுவான நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவக்கூடும் என்பதே அவரது நம்பிக்கை.

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்