எச்சரிக்கை - அதிகரிக்கும் எரிவாயுக் கட்டணம்!!

5 ஐப்பசி 2023 வியாழன் 12:05 | பார்வைகள் : 8222
எரிபொருள் கட்டுப்பாட்டு ஆணையமான CRE (Commission de régulation de l’énergie) வழங்கியிருக்கும் அறிக்கையில் ஒக்டோர் மாதத்தில் இருந்து எரிவாயுக் கட்டணம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் மற்றும் வெண்ணீர் சூடாக்கி மற்றும் வெப்பமாக்கி (cuisson/eau chaude et chauffage) ஆகியவற்றிற்காக உபயோகிக்கும் எரிவாயு ஒரு மெகாவட்டிற்கு 9€21 (9,21 €/MWh) அதிகரிக்க உள்ளது.
கடந்த சில் மாதங்களாக அதிகரிக்காமல் இருந்த எரிவாயுக் கட்டணம், எரிவாயுக் கொள்வனவு விலை அதிகரிப்பால், இந்தக் கட்டண அதிகரிப்பு நடந்துள்ளதாக CRE தெரிவித்துள்ளது.
இந்த, அதிகரிப்பின் பின்னர் ஒரு மெகாவட்டிற்கு 87€21 ஆகியிருக்கும் கட்டணமானது, 2023 ஜுன் மாதத்தில் CRE வினால் உறைநிலைக் கட்டணமாக அறிவித்த கட்டணத்தை விடக் குறைவானது என எரிபொருள் கட்டுப்பாட்டு ஆணையம் நியாயப்படுத்தி உள்ளது.
பிரதமர் தனது தன்னிச்சையான அதிகாரத்தால் பிரகடணப்படுத்தியிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் முதற்பாதிப்பு, இந்தக் கட்டண அதிகரிப்பில் தெரிய ஆரம்பித்துள்ளது.