பருவகாலத்தை விட அதிக வெப்பம் - வானிலை அவதானிப்பு மையம் விடுக்கும் எச்சரிக்கை!
1 ஐப்பசி 2023 ஞாயிறு 10:55 | பார்வைகள் : 5130
இந்த பருவகாலத்தில் நிலவும் வெப்பத்தை விட, அடுத்துவரும் சில நாட்கள் அதிகளவு வெபம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் 35°C வரை வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வெப்பமானது இந்த பருவகால வெப்பத்தோடு ஒப்பிடுகையில் 12 தொடக்கம் 14°C வரை அதிகமாகும்.
அதேவேளை, நாளை ஒக்டோபர் 2, திங்கட்கிழமையும் இதுபோன்ற அதிகவெப்பமான நாளாக அமையும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பிரான்சின் தென்மேற்கு பிராந்தியங்களிலேயே இந்த கடும் வெப்பம் நிலவ உள்ளது எனவும், இது ஒரு விதிவிலக்கான பருவகால மாற்றம் எனவும் Météo-France அறிவித்துள்ளது.