சந்திரயானை போல இந்தியா-அமெரிக்கா உறவு : ஜெய்சங்கர் பேச்சு
1 ஐப்பசி 2023 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 3467
இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்த பிரதமர் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இருநாட்டு உறவானது சந்திரயானை போல உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வாஷிங்டனில் உள்ள இந்தியா இல்லத்தில், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு முன் எப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது; சந்திரயானை போல, இருநாட்டு உறவானது. நிலவுக்கும் செல்லும்; நிலவுக்கு அப்பாலும் செல்லும். ஜி20 மாநாட்டின் வெற்றி அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது. வெற்றிகரமாக ஜி20 மாநாட்டை நடத்த அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பங்களிப்பு, ஆதரவை பொதுவெளியில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான மனித நேயம் இருதரப்பு உறவை தனித்துவமாக்குகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, சந்திரயான்3, ஜி20 வெற்றி ஆகியவற்றை குறிப்பிட்டு, இன்றைய இந்தியா முன்பு இருந்ததை விட வித்தியாசமானது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.