Paristamil Navigation Paristamil advert login

200 பயணிகளுடன் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானப் பயணம் இரத்து! நெருக்கடியில் பயணிகள்

200 பயணிகளுடன் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானப் பயணம் இரத்து! நெருக்கடியில் பயணிகள்

1 ஐப்பசி 2023 ஞாயிறு 13:07 | பார்வைகள் : 2700


நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு இன்று  காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பயணிகளில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியும் ஒருவராவார்.

இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-181 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று  காலை 08.20 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு புறப்படவிருந்தது.

அதற்காக காலை 07.15 மணிக்கு இராஜாங்க  அமைச்சர் உட்பட 200க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், இந்த விமானம் காலை 11.00 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறவில்லை, அதுவரை பயணிகளும் விமானத்தில் காத்திருந்தனர்.

பின்னர், குறித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இந்த விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் அது நிறைவேறவில்லை. இந்நிலையில், நேபாளத்துக்கான இன்றைய விமான சேவை இரத்துச் செய்யப்பட்டது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்