Paristamil Navigation Paristamil advert login

வளர்ந்த நாடாக மாற வலுவான ஆயுதப் படைகள் தேவை: ராஜ்நாத் சிங்

வளர்ந்த நாடாக மாற வலுவான ஆயுதப் படைகள் தேவை: ராஜ்நாத் சிங்

1 ஐப்பசி 2023 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 9623


2047க்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு வலுவான ஆயுதப் படைகள் தேவை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு துறை நிர்வகிப்பு பிரிவு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாம் ஒரு வளர்ந்த தேசத்தை உருவாக்க விரும்பினால் வலுவான ஆயுதப் படைகள் நமக்குத் தேவைப்படும். எனவே, எங்களிடம் உள்ள நிதிகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

2047க்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாறுவதற்கு வலுவான ஆயுதப் படைகள் தேவை. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் கண்டறிந்து உடனடியாக மதிப்பாய்வு செய்யும் வகையில் வலுப்படுத்த வேண்டும்.பிரச்னையை விரைவாக சமாளிக்க உதவும்.

நாட்டின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் அமைப்புக்கு பாராட்டுக்கள். வரும் காலங்களில் எழும் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பொருளை வாங்குவது அவசியமா இல்லையா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்