இரண்டாம் உலகப்போரின் பின்னர் - பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் கடுமையாக பாதிப்பு!!
29 புரட்டாசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5792
இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் முதன்முறையாக பிரான்சில் குழந்தை பிறப்பு வீதம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 726,000 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை சென்ற 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2% சதவீதம் குறைவாகும். அதேவேளை, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% சதவீதம் குறைவாகும்.
அதுவே, 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8% சதவீதம் வீழ்ச்சியாகும்.
வருடம் ஒன்றில் 726,000 குழந்தைகள் பிறப்பது பிரான்சில் இரண்டாம் உலகப்போரின் பின்னர் பதிவாகிய மிகக்குறைந்த அளவு எண்ணிக்கையாகும்.