தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வாய்ப்பு
29 புரட்டாசி 2023 வெள்ளி 08:33 | பார்வைகள் : 10345
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan