Google மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய வாய்ப்பு
29 புரட்டாசி 2023 வெள்ளி 08:32 | பார்வைகள் : 2929
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள், நிலநடுக்க எச்சரிக்கை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய நிலஅதிா்வு மையத்துடன் கலந்தாலோசித்து நிலநடுக்க எச்சரிக்கை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம், ஆண்டிராய்டு வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுகிறதா என்ற முன்னறிவிப்பு சேவையை பெற முடியும்.
அதாவது, மழை முன்னறிவிப்பு போன்று நிலநடுக்க முன்னறிவிப்பையும் பெற முடியும்.
நிலநடுக்கம் ஆரம்பமாவதற்கு, சென்சார்கள் மூலம் கண்டறியும் வகையில் கூகுள் இதனை வடிவமைத்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதி மற்றும் அளவு ஆகியவற்றையும் கூகுள் சர்வர்கள் மதிப்பிடும்.
அதுமட்டுமல்லாமல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடா்கள் குறித்த தகவல்களை தங்களுடைய பயனர்களுக்கு வழங்குவதற்காக, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துடன் கூகுள் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் முன்னெச்சரிக்கை சேவையானது பல்வேறு நாடுகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.