Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் பால் சூப்

தேங்காய் பால் சூப்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9380


மாலையில் சூப் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும். அத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் சூப். இந்த சூப் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த தேங்காய் பால் சூப்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். 
 
தேவையான பொருட்கள்: 
சோள மாவு - 2 டீஸ்பூன் 
தேங்காய் பால் - 1 கப் 
பசும்பால்/சாதாரண பால் - 1 கப்
 வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) 
இஞ்சி - 1 துண்டு (தோல் நீக்கி துருவியது) 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
எலுமிச்சை பழம் - 1/2 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் பால், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
 
அடுத்து அதில் மஞ்சள் தூள், தேங்காய் பால் மற்றும் சோள மாவு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். கலவையானது கொதித்ததும், அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் ரெடி!!! இதனை பரிமாறும் போது, இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாற வேண்டும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்