Paristamil Navigation Paristamil advert login

நடு வீதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி!

நடு வீதியில் துப்பாக்கிச்சூடு -  இருவர் பலி!

29 புரட்டாசி 2023 வெள்ளி 09:36 | பார்வைகள் : 7998


மார்செய் (Marseille) நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 

நான்காம் வட்டாரத்தின் avenue des Chutes-Lavie வீதியில் பயணித்த கறுப்பு நிற மகிழுந்தில் இருந்து இறங்கிய ஆயுததாரி ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். இரவு 8 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், கொல்லப்பட்ட இருவரும் 41 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அதனை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்