Paristamil Navigation Paristamil advert login

காணாமல் போன சிறுமி லீனா - பெருமளவில் தேடுதல் பணி!

காணாமல் போன சிறுமி லீனா - பெருமளவில் தேடுதல் பணி!

29 புரட்டாசி 2023 வெள்ளி 10:44 | பார்வைகள் : 5191


லீனா எனும் 15 வயதுச் சிறுமி காணாமல் போய் இன்றுடன் ஆறு நாட்கள் ஆகின்றன. இன்று வெள்ளிக்கிழமை காலை பெருமளவிலான தேடும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக ஜொந்தாமினர் குறிப்பிட்டனர். 

“opération coordonnée d'envergure” என பெயரிடப்பட்டு இந்த தேடுதல் பணி இடம்பெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று குறித்த சிறுமி அவரது வீட்டில் இருந்து 3 கி. மீ தொலைவில் உள்ள Saint-Blaise-La-Roche (Bas-Rhin) நிலையம் நோக்கி நடந்து சென்றுள்ளார். பின்னர் Strasbourg நகரில் உள்ள அவரது காதலனது வீட்டுக்குச் செல்வதற்காக குறித்த TER தொடருந்து நிலையத்துக்குச் சென்றுள்ளார். 

தொடருந்து காலை 11.20 மணிக்கு புறப்பட்டதாகவும், அதில் அவர் நிச்சயமாக பயணம் மேற்கொண்டமைக்குரிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது வங்கியில் இருந்து எவ்வித பண பரிவர்த்தனையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிடைத்த ஆதாரங்களையும், தரவுகளையும் கொண்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணி இடம்பெற்றுவருவதாக ஜொந்தாமினர் தெரிவித்தனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்