மகளின் இழப்பு குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி!
29 புரட்டாசி 2023 வெள்ளி 10:50 | பார்வைகள் : 4423
2012 ஆம் ஆண்டு வெளியான 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி .முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பார் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனி, இதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி என அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவர் நடித்த படங்களும் முதலுக்கு மோசம் இல்லாமல் வசூல் செய்தது. குறிப்பாக கடந்த மே மாதம் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் தமிழ் - தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. ஏற்கனவே தன்னை ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும், நடிகராகவும் நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தின் மூலம், இயக்குனராகவும் நிரூபித்தார்.
எவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும், தன்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்பும் விஜய் ஆண்டனி வாழ்க்கையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த சம்பவம்... அவரின் வாழ்க்கையில் ஈடுகட்டமுடியாதத இழைப்பாக மாறியது. சர்ச் பார்க் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த, விஜய் ஆண்டனியின் மூத்த மகளான மீரா, மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் நேரடியாக சென்று மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தற்போது வரை இந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வரும் விஜய் ஆண்டனி, அவர் நடிப்பில் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள, 'ரத்தம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னுடைய இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழாவில், இந்த படம் குறித்தும், இயக்குனர் அமுதன் குறித்தும் பேசிய விஜய் ஆண்டனி, சுமார் 10 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தின் நடிப்பதாக தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் "மகளின் இழப்பு குறித்து பேசுகையில், 'நான் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்விப்பது ஒன்று தான். நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போனது போல் மாறிவிட்டேன். ஒரு அப்பாவாக தங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு ஆனால் அனைத்திற்கும் அனுபவம் தேவை. வாழ்க்கையின் எல்லா திசைகளையும் நான் பார்த்து விட்டேன். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை மறக்க யோசிக்க வேண்டாம் நம் வாழ்க்கையே ஞாபகம் தான் நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன் வலி ஏற்பட்டால் கூட அந்த வலியோடு வாழ நினைப்பேன்’ என பேசி பேசியுள்ளார்".