இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சி - மஹிந்த எதிர்ப்பு

29 புரட்டாசி 2023 வெள்ளி 15:08 | பார்வைகள் : 5296
இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘சமூக ஊடகங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. எனக்கு என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.’
எவ்வாறாயினும், கடந்த நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொஹொட்டுவவைச் சேர்ந்த மூத்தவரான எஸ்.எம்.சந்திரசேன சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.