மெற்றோக்களில் மூட்டைப்பூச்சிகள் இல்லை என வாதிடும் RATP!
29 புரட்டாசி 2023 வெள்ளி 16:07 | பார்வைகள் : 5825
மெற்றோ தொடருந்து ஒன்றின் சாரதி மூட்டைப்பூச்சி கடிக்கு ஆளானதாக தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட தொடருந்து நிறுவனமான RATP, இந்த குற்றச்சாட்டினை மறுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை எட்டாம் இலக்க மெற்றோ சாரதி ஒருவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். அதையடுத்து, குறித்த தொடருந்தினை முற்றாக சேவையில் இருந்து நீக்கி முற்றாக பரிசோதிக்கப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் மூட்டைப்பூச்சிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என RATP இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்துள்ளது.
மூட்டைப்பூச்சிகள் எதுவும் தொடருந்தில் இருப்பது நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.