கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
30 புரட்டாசி 2023 சனி 05:28 | பார்வைகள் : 2740
இன்றைய காலத்தில் கணவன் மனைவிக்குள் பிரிவும், விவாகரத்து கேட்டு கோர்டு வாசலில் வந்து நிற்பது அதிகமாகவே மாறிவிட்டது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறிய சிறிய பிரச்சினையை கடந்து செல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணமாகவே அமைகிறது என்று சொல்லலாம்.
பெரும்பாலும் இவர்களுக்குள் ஈகோவால் தங்களின் மகிழ்ச்சியை தாங்களே இழந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த பதிவில் விவாகரத்து எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்...
முதலில், உங்கள் துணையின் முடிவு உங்களுக்கு தவறாக இருந்தால் நீங்கள் அவரிடம் எடுத்து கூறலாம்.
உங்கள் துணையோடு உங்களுக்கு பிரச்சனை இருந்ததை ஒப்புகொள்ளுங்கள்.
மேலும், உங்கள் துணையின் உணர்வுகளை அங்கீகரிக்க விரும்புவதாக சொல்லுங்கள். உங்கள் உறவை சரி செய்ய இது உதவும். அதேப்போல் கண்மூடித்தனமான அவரது விருப்பத்துக்கு தலையாட்டுவது என்பது உறவை மேலும் மோசமான பாதையில் தள்ளிவிட செய்யலாம்.
இதன் பின்னர், எப்போதும் எல்லா நேரத்திலும் தவறு உங்கள் மீது இருந்தால் தயங்காமல் ஒப்புகொள்வதோடு மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்.
இது உங்களுக்குள் மலை போல் இருந்த பிரச்சனையையும் சரி செய்து விடக்கூடும். துணையுடன் எவ்வளவு பேசினாலும் மூன்றாவதாக ஒரு பெரியவர் முன்னிலையில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதால் புரிதல் அதிகரிக்கலாம்.
திருமண ஆலோசகர்கள், நிபுணர்கள், உளவியலாளர்கள் உங்கள் உறவில் இருக்கும் சிக்கலை சிக்கில்லாமல் களைந்தெடுக்க உதவுவார்கள்.
அதன் மூலம் துணையின் நியாயமான கோரிக்கைகளை மற்றவர் புரிந்து கொள்ள முடியும். பின்னர், உங்கள் உறவில் இணக்கம் வருவதை இருவரும் முயற்சி எடுத்து இரு புள்ளியாக செயல்படாமல் ஒரு புள்ளியாக ஆக்குங்கள்.
துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். திட்டமிடுவதற்கு முன்பு அவர்களது கருத்தையும் கேளுங்கள். இருவரும் ஒரு பக்கமாக இருந்தால் ஆலோசனை விஷயத்தில் உங்கள் பிரச்சனை எளிதில் தீரும்.
பின், உங்கள் துணை உங்களை நாடி வரும் போது உங்கள் முயற்சியை நிறுத்தாதீர்கள். சிறிய விரிசலுக்கு பிறகு மீண்டும் துளிர்க்கும்.. இதனால் அவர்களின் மீது அன்புக்காட்டி அவர்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.