Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் ஒரேநாளில் 130 மில்லியன் euros பணத்திற்கு அதிபதியான பிரான்ஸ் நாட்டவர்.

பிரான்சில் ஒரேநாளில் 130 மில்லியன் euros பணத்திற்கு அதிபதியான பிரான்ஸ் நாட்டவர்.

30 புரட்டாசி 2023 சனி 06:05 | பார்வைகள் : 5520



'Euromillions' எனும் lottery 1990ல் சிந்திக்கப்பட்டு 2002ல் 'European lottery' எனும் பெயரோடு அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 'Méga Millions' என பெயர் மாற்றப்பட்டு, நிறைவாய் EuroMillions என இன்று அழைக்கப்படுகிறது. ஐந்து சரியான இலக்கங்கள், இரண்டு சரியான நட்சத்திரங்கள் இருந்ததால் குறித்த பரிசுத்தொகை வென்றதாக கருதப்படுகிறது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை (29/09) 130 மில்லியன் euros பணத் தொகைக்கான குலுக்கல் நடைபெற்றது இதில் 9, 11, 13, 21, 32 எனும் ஐந்து இலக்கங்களும் 02,07 இலக்க நட்சத்திரங்களும் விழுந்துள்ளன. இந்த அதிஷ்ட இலக்கங்கள் சரியாக யாருக்கு உரியது என La Française des Jeux சரிபார்த்தது.

குறித்த சரியான இலக்கங்கள் இரண்டு சரியான நட்சத்திரங்கள் பிரான்ஸ் நாட்டில் வாழும் ஒருவருக்கே பொருந்தி உள்ளது இதனால் jackpot பரிசாக 130 millions euros பணத்தை பிரான்ஸ் நாட்டவர் பெறப்போகிறார். இந்த செப்டம்பர் மாதத்தில் Euromillions ஜாக்பாட்டை வென்று இரண்டாவது நபர் இவர் ஆவார். முதலில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர் 109 மில்லியன் Eurosகளை வென்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்