Paristamil Navigation Paristamil advert login

எலிகளை முற்றாக அழிக்கும் பிரபல நாடு....!

எலிகளை முற்றாக அழிக்கும் பிரபல நாடு....!

12 ஆடி 2023 புதன் 06:00 | பார்வைகள் : 6662


நியூசிலாந்தில் எலிகளை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2050 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த எலிகளையும் அழிக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் இறங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் நியூசிலாந்து அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் கிவி போன்ற பறவைகளின் முட்டைகளை வேட்டையாடும் எலிகளை 2050ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் ஏராளமான பணம், அறிவியல் தொழில்நுட்ப முறைகள், மனித வளம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் எலிகளை முற்றாக ஒழித்த நிலப்பரப்பு என்றால் அது தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தெற்கு ஜார்ஜியா தீவு மட்டுமே. அதுபோல நியூசிலாந்து நாட்டிலும் இது சாத்தியமே என்ற நம்பிக்கையில் எலிகளை அழிக்கும் நடவடிக்கையை நியூசிலாந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்