நாடு முழுவதும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளது - ஜனாதிபதி மக்ரோன் கருத்து!
2 ஐப்பசி 2023 திங்கள் 20:53 | பார்வைகள் : 4374
‘பிரான்சின் ஒவ்வொரு பாகத்திலும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளது’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை Lot-et-Garonne நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மக்ரோன் அங்கு வைத்து இதனை தெரிவித்துள்ளார். பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிட்ட அவர், மார்செய் (Marseille) நகரில் பெரும் சவாலாக உள்ள போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இராணுவத்தினரை பயன்படுத்துவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, இராணுவத்தினரின் பணி அது இல்லை எனவும், காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினரின் கடமை அது எனவும் அவர் தெரிவித்தார்.
[மார்செய் நகரில் இவ்வருடத்தில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 39 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். ]
அதேவேளை, பிரான்சில் மருத்துவர்களுக்கான தேவை இருப்பதாகவும், 2030 ஆம் ஆண்டை இலக்கு வைத்து மருத்துவர்களின் வெற்றிடம் நிரப்பப்படும் எனவும் ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.
10 நிமிடங்கள் நீடித்த இந்த நேர்காணல் l'hôtel de ville de Clairac (Lot-et-Garonne) பூங்காவில் வைத்து பதிவு செய்யப்பட்டு France 3 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.