யாழில் நடந்த சோகம் - பால் சுரக்கவில்லை - தாய் விபரீத முடிவு

3 ஐப்பசி 2023 செவ்வாய் 03:52 | பார்வைகள் : 7639
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1