Paristamil Navigation Paristamil advert login

வெளியில் இருந்து ஆதரவு: வைகோ திடீர் திட்டம்

வெளியில் இருந்து ஆதரவு: வைகோ திடீர் திட்டம்

3 ஐப்பசி 2023 செவ்வாய் 05:05 | பார்வைகள் : 3345


லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க.,வுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என, அக்கட்சி பொதுச்செயலர் வைகோவுக்கு, தி.மு.க., தரப்பில் நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,விடம் எதிர்பார்க்கும் 'சீட்'  கிடைக்கவில்லை என்றால், வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என, வைகோ திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தரப்பில் இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளது. வேலுார் தொகுதியை மட்டும் ஒதுக்குவதற்கு, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

ம.தி.மு.க.,வுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படும். அத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் வைகோவின் மகனும், கட்சியின் முதன்மை செயலருமான துரை போட்டியிட வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது.

மதுரையில் நடைபெற்ற ம.தி.மு.க., மாநாட்டில், 'நான் போட்டியிடவில்லை' என, துரை அறிவித்து விட்டார். எனவே, மாநில நிர்வாகிகள், 6 பேர் போட்டியிடுவதற்காக, தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கையை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என, ம.தி.மு.க., எதிர்பார்க்கிறது.

ஆனால், ஒரு தொகுதி மட்டும் ஒதுக்குவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளதால், வைகோவும், துரையும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

துரையை தவிர மற்ற நிர்வாகிகளுக்கு, 'சீட்' வழங்கினால், அவர்களால் வெற்றி பெறுவது கடினம்.

எனவே, ம.தி.மு.க.,வுக்கு கூடுதல் சீட் வழங்க தி.மு.க., விரும்பவில்லை.<br><br>உதயசூரியன் சின்னத்தில் துரை போட்டியிட்டால், அவரும் தி.மு.க., உறுப்பினராக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடந்தால், ம.தி.மு.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும்.

எதிர்காலத்தில் ம.தி.மு.க.,வை, தி.மு.க.,வுடன் இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதை தவிர்க்கவே கூடுதல் தொகுதிகளில், தனி சின்னத்தில் போட்டியிடலாம் என துரை விரும்புகிறார்.

ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 4 பேரும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களாக தான் கருதப்படுவர்.

இதனால், தி.மு.க., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கினால், வெளியிலிருந்து தி.மு.க., வுக்கு ஆதரவு அளிக்க வைகோ திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


தி.மு.க., தரும் நெருக்கடி

ம.தி.மு.க., விலிருந்து, வெளியேற்றப்பட்ட அதிருப்பதியாளர்களான மாநில நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில், இணைய விருப்பம் தெரிவித்து, காத்திருக்கின்றனர்.வைகோ மனம் வருந்த கூடாது என்பதற்காகவும், கூட்டணி தர்மத்தை மதித்தும், அவர்களை தி.மு.க.,வில் சேர்க்காமல் உள்ளது தி.மு.க.,ஒரு வேளை, தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க.,வுடன் ம.தி.மு.க., கூட்டணியில் இணையுமானால், அக்கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து கட்சியில் சேர்க்க தி.மு.க., தரப்பில் முடிவெடுக்கப்பட் டுள்ளது. இதற்கிடையில், கூட்டணி குழப்பம் எதையும் காட்டிக் கொள்ளாமல், உடல் நலத்தில் அக்கறை செலுத்தும்படி, வைகோவிடம் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் கூறியுள்ளனர் என, ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்