ஒன்றாரியோ மாகாணத்தில் மருந்தகங்களில் அறிமுகமாகும் மருந்து வகை

3 ஐப்பசி 2023 செவ்வாய் 05:48 | பார்வைகள் : 12153
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பார்மஸிகள் (மருந்தகங்கள்) மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வகை நோய்களுக்கு மருந்தாளர்களிடமிருந்து, மருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ சுகாதார அமைச்சர், சில்வியா ஜோன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மருந்தகங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள 16 நோய்களுக்கு மேலதிகமாக ஆறு நோய்களுக்கு பார்மஸிகளில் மருந்து வழங்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இன்றி மருந்தகங்களிலேயே இந்த நோய்களுக்கு மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1