நியூயோர்க் நகரில் கடும் புயல் .... அவசர நிலை பிரகடனம்!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 08:10 | பார்வைகள் : 7983
நியூயோர்க் நகரில் புயல் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நகரில் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு முனையம் மூடப்பட்டதாகவும் வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டின.
இந்த நகரத்தின் கவர்னர் மக்களை பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வெள்ளம் நிறைந்த வீதிகள் வழியாக வாகனம் ஓட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நியூயோர்க் நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது போக்குவரத்து அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க் நகரிலும், நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025