Paristamil Navigation Paristamil advert login

‘தலைவர் 170’ படத்தில் மூன்று கதாநாயகிகளா?

‘தலைவர் 170’ படத்தில் மூன்று கதாநாயகிகளா?

3 ஐப்பசி 2023 செவ்வாய் 08:28 | பார்வைகள் : 2570


ஜெயிலர் படத்தின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு ரஜினி தனது 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்க உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இந்த படம் உருவாக இருக்கிறது. 

இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படக்குழு மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பை அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஏற்கனவே தலைவர் 170 கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் தலைவர் 170 இணைந்துள்ளார்கள் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்