உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார
3 ஐப்பசி 2023 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 2890
இலங்கையின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இருப்பார் என்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது.
Marylebone Cricket Club (MCC) உலக கிரிக்கெட் கமிட்டியின் புதிய தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவில் குமார் தர்மசேனா, சௌரவ் கங்குலி, ஜூலன் கோஸ்வாமி, ஹீதர் நைட், சுசி பேட்ஸ், கிளேர் கானர், ஜஸ்டின் லாங்கர், இயோன் மோர்கன், ரமீஸ் ராஜா, கிரேம் ஸ்மித் மற்றும் ரிக்கி ஸ்கெரிட் ஆகியோர் உள்ளனர்.
மார்க் நிக்கோலஸ் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுகிறார்.
இவர் ஹாம்ப்ஷயர் அணியின் முன்னாள் கேப்டனாகவும் மெரில்போன் கிரிக்கெட் கழக கிரிக்கெட் சந்தைப்படுத்தல் மற்றும் சட்டங்கள் குழுவில் அங்கம் வகித்ததுடன் கிரிக்கெட்டின் ஸ்பிரிட் கொள்கையை உருவாக்கிய சிறிய உழைக்கும் கட்சியில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.