நாடு திரும்பியவுடன் மனைவியை கொலை செய்த இலங்கையர்
3 ஐப்பசி 2023 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 13179
இலங்கையில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan