வாட்ஸ்அப் சேனலை ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு விபரம்
3 ஐப்பசி 2023 செவ்வாய் 11:05 | பார்வைகள் : 3102
மெட்டா வெளியிட்டுள்ள புதிய வசதியான வாட்ஸ்அப் சேனல் குறித்த விபரத்தை இங்கு காண்போம்.
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் 'வாட்ஸ்அப் சேனல்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் மெயின் பக்கத்தில் Chats, Status மற்றும் Calls என 3 பிரிவுகள் இருந்தன.
இப்போது புதிய Update மூலம் Chats, Update மற்றும் Calls எனும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. இதில் நிர்வாகிகள் உரை, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் போல்ஸ் போன்ற வாக்கெடுப்புகளை அனுப்ப அனுமதிக்கப்படும்.
அதேபோல், Search சேனல் எனவும் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் பொழுதுபோக்கு, விருப்பப்பட்ட சேனல்களை கண்டறியலாம்.
Chat மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் வாட்ஸ்அப் சேனல்களுக்கான அழைப்பிதழ்களை அனுப்பலாம். வாட்ஸ்அப் சேனலில் சிறப்பம்சம் என்னவென்றால் Followerகளின் தொலைபேசி எண்ணை அட்மினுக்கோ அல்லது பிற Followerகளுக்கோ வெளிப்படுத்தாது.
அதே போல் சேனல் நிர்வாகிகள் தங்கள் சேனலை யாரெல்லாம் பின் தொடரலாம் என கட்டுப்படுத்த முடியும்.
வாட்ஸ்அப் சேனலை உருவாக்குவது எப்படி...?
வாட்ஸ்அப்பில் Update tab பக்கத்திற்கு செல்லுங்கள், அங்கிருக்கும் வாட்ஸ்அப் சேனல்கள் பகுதியை திறக்க வேண்டும்
பின் வாட்ஸ்அப் சேனல் பக்கத்தில் காண்பிக்கப்படும் '+' எனும் icon-ஐ Click செய்யவும்
இப்போது Create Channel என்பதை தெரிவு செய்யுங்கள்
உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு சொந்தமான பக்கத்தில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்
நீங்கள் உருவாக்க விரும்பும் சேனலுக்கான பெயர், விளக்கம் மற்றும் Profile படத்தை உள்ளிடவும்
தற்போது அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு, Create Channel என்பதை Click செய்யவும்
இப்போது நீங்கள் உருவாக்க விரும்பிய வாட்ஸ்அப் சேனல் உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும்