Paristamil Navigation Paristamil advert login

7 வருடம் ஷாம்பூவே பயன்படுத்தாத நபர்....

7 வருடம் ஷாம்பூவே பயன்படுத்தாத நபர்....

3 ஐப்பசி 2023 செவ்வாய் 11:07 | பார்வைகள் : 4920


இளைஞர் ஒருவர் 7 வருடமாக தலைக்கு ஷாம்பூவே பயன்படுத்தாததால் அதன்  விளைவு குறித்து வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

யூடியூப் சேனலை நடத்தி வரும் எய்டன் என்பவர் “7 இயர்ஸ் நோ ஷாம்பூ ரிசல்ட்” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதன் டிஸ்கிரிப்ஷனில் ஏழு வருடம் ஷாம்பு பயன்படுத்தாமல் இருப்பது எவ்வாறு என்னுடைய தலையையும், தலைமுடியையும் மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "இன்றோடு கிட்டத்தட்ட ஷாம்பூவை பயன்படுத்துவதை நிறுத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது எந்த ஒரு கண்டிஷனரும் பயன்படுத்தாமல் இனி என்னுடைய தலை முடி மற்றும் தலையின் ஆரோக்கியத்தை சோதனை செய்து பார்க்க போகிறேன்” என்று கூறுகிறார்.

இதில் முன்னர் அவர் தலையில் ஏற்பட்ட பொடுகை நீக்க ஆன்ட்டி டேன்ட்ரஃப் ஷாம்புவை தினசரி உபயோகித்து வந்த போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து, இது குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், அவர் அந்த வீடியோவில், "நான் இந்த பிரச்சினையை சரி செய்த முடிவு எடுத்தேன் எனவே இனி ஷாம்புவை பயன்படுத்த போவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன்” என்றும் மேலும் அதனால் நல்லவிதமான முடிவுகள் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்