Paristamil Navigation Paristamil advert login

முடி உதிர்வு பிரச்னையை தீர்க்கும் எளிய வழிமுறைகள் !!!

முடி உதிர்வு பிரச்னையை தீர்க்கும் எளிய வழிமுறைகள் !!!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 13:31 | பார்வைகள் : 3178


இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை முடி கொட்டுவதுதான். பல மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றத்தால் முடி கொட்டும் பிரச்னை தற்போது அதிகரித்து விட்டது. முடி கொட்டாமல் இருக்க நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஜூஸ் வகைகள் பற்றி பார்க்கலாம்.

முடி உதிர்வைத் தடுப்பதற்கு நாமும் பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து எதுவும் பலனளிக்காமல் சோர்ந்திருப்போம். ஆனால், முடி உதிர்வைத் தடுப்பதற்கு நாம் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அனைத்துமே முடியின் மேற்புறத்தில் செயல்படுபவையாகவே இருக்கின்றன. ஆனால் முடிக்கு, உடலின் உள்ளிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து என்பதுதான் மிகவும் அவசியமாகும். முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவுகளை நாம் நிச்சயமாக சாப்பிட வேண்டும். அதுபோன்ற உணவுகளை தினசரி நாம் எடுத்துக்கொள்ள மறக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, சிலவற்றை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்வது முடிக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்: பொதுவாகவே, வெள்ளரிக்காய் ஜூஸில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இது முடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரத்தில் இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காயுடன் எலுமிச்சை, புதினா சேர்த்து அரைத்துக் குடிக்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்: முடிக்கு ஆரோக்கியத்தைத் தருவதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் ஏற்றதாகும். வெறும் நெல்லிக்காய் கூட தினமும் சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், இது முடி உதிர்வை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், முடி உதிர்வைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பண்பும் இதில் உள்ளது.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. முடியின் வேர்கள் பலப்பட இரும்புச்சத்து மிகவும் முக்கியம். இது ரத்த சோகையை நீக்குவதால் அதனால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க உதவியாய் இருக்கும். இதுதவிர, இரும்புச்சத்து நிறைந்த எந்த உணவு வகைகளையும் நீங்கள் சாப்பிடலாம்.

கீரை ஜூஸ்: கீரை வகைகளில் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, பசலைக்கீரையில் மெக்னீசியம், வைட்டமின் சி, பொட்டாசியம், தாமிரம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை அப்படியே அரைத்து சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் முடி உதிர்வு குறையும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்