Paristamil Navigation Paristamil advert login

பேருந்து சாரதிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு!

பேருந்து சாரதிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரிப்பு!

3 ஐப்பசி 2023 செவ்வாய் 14:38 | பார்வைகள் : 3959


பேருந்து சாரதிகள் தாக்கப்படுவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.  

சென்ற 2022 ஆம் ஆண்டில் 891 தாக்குதல் சம்பவங்கள் சாரதிகளுக்கு எதிராக இடம்பெற்றுள்ளன. நாள் ஒன்றுக்கு இரண்டில் இருந்து மூன்று சாரதிகள் வரை தாக்கப்படுவதாக RATP நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய 2021 ஆம் ஆண்டில் 690 தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. 

2020 ஆம் ஆண்டில் 606 தாக்குதல் சம்பவங்களும், 2019 ஆம் ஆண்டில் 802 தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

“தாக்குதலின் பின்னர் அனைவரும் சேவைக்கு வருவதை நிறுத்தினால், பிரான்சில் பேருந்து சேவைகளே இயங்காது. இந்த எண்ணிக்கை கவலையளிக்கிறது!” என RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்