Paristamil Navigation Paristamil advert login

பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு அபாரத தொகை அதிகரிப்பு

பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு அபாரத தொகை அதிகரிப்பு

3 ஐப்பசி 2223 வெள்ளி 15:07 | பார்வைகள் : 2382


அரச பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போருக்கான அபாரத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது 

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் செல்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 3000 ரூபாய் அபராதத்துடன், இரு மடங்காக பேருந்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை அடுத்த வருடம்  முழுமையாக அமுல்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

தற்போது, ​​பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால், 250 ரூபாய் அபராதமும், இரண்டு மடங்கு கட்டணமும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்