Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோ மிரட்டல் கோல்... அல் நஸர் அணியின் அபார வெற்றி

ரொனால்டோ மிரட்டல் கோல்... அல் நஸர் அணியின் அபார வெற்றி

4 ஐப்பசி 2023 புதன் 04:47 | பார்வைகள் : 5903


AFC சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இஸ்டிக்லோல் அணியை வீழ்த்தியது.

முதல் பாதியில் தடுமாறிய அல் நஸர்
KSU football field மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் இஸ்டிக்லோல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் இஸ்டிக்லோல் அணி வீரர் செனின் செபாய் அபாரமாக கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் இஸ்டிக்லோல் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

அதனைத் தொடர்ந்து கோல் முயற்சியில் ஈடுபட்ட அல் நஸர் அணிக்கு 66வது நிமிடத்தில் தான் வெற்றி கிடைத்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ மிரட்டலாக கிக் செய்து கோல் அடித்து மிரட்டினார்.

அதன் பின்னர் வீறுகொண்டு எழுந்த அல் அணி வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 72வது நிமிடத்தில் தலிஸ்கா தலையால் முட்டி கோல் அடித்தார். 

அடுத்த 5 நிமிடங்களில் அல் நஸர் வீரர் பின்னே தள்ளிய பந்தை துரிதமாக செயல்பட்டு தலிஸ்கா கோலாக மாற்றினார்.

90வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த ஷாட்டை எதிரணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார். 

எனினும், இஸ்டிக்லோல் அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

வெற்றிக்கு பின்னர் ரொனால்டோ வெளியிட்ட பதிவில், 'அணியில் உள்ள அனைவரிடமும் சிறப்பான ஆட்டம்! ACL சாம்பியன்ஸ் லீக் கோலை அடித்ததில் மகிழ்ச்சி! நாங்கள் வெற்றி பெறுகிறோம்!' என தெரிவித்துள்ளார்.   

வர்த்தக‌ விளம்பரங்கள்