Paristamil Navigation Paristamil advert login

Yvelines : கல்லூரி கட்டிடத்தில் தீ! - 150 பேர் வெளியேற்றம்!

Yvelines : கல்லூரி கட்டிடத்தில் தீ! - 150 பேர் வெளியேற்றம்!

4 ஐப்பசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 8910


Yvelines மாவட்டத்தில் உள்ள HEC கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தீ பரவியது. அங்கிருந்த 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இரவு 8 மணி அளவில் தீ பரவியதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 60 வரையான தீயணைப்பு படையினர் இணைந்து தீயினை கட்டுப்படுத்தினார்கள். 400 தொடக்கம் 500 சதுரமீற்றர் பரப்பளவு உள்ள கட்டிடம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி அளவில் தீ அணைக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தீ பரவலுக்குரிய காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்