Paristamil Navigation Paristamil advert login

ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலி!

ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலி!

1 ஐப்பசி 2023 ஞாயிறு 14:04 | பார்வைகள் : 8137


ஐந்தாவது தளத்தில் இருந்து விழுந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான். இச்சம்பவம் நேற்று Villeneuve-la-Garenne (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. 

Avenue Jean-Jaurès வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் ஒருவன் இரவு 8.15 மணி அளவில் கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளான். படுகாயமடைந்த சிறுவன் சில நிமிடங்களிலேயே பலியாகியுள்ளான். 

வீட்டின் ஜன்னல் வழியாக வெளியேறியிருந்த நிலையிலேயே சிறுவன் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்