ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம்
2 ஐப்பசி 2023 திங்கள் 06:43 | பார்வைகள் : 3576
பயங்கவராத செயலில் ஈடுபட, ஒரு லட்சம் முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என, செயல்திட்டம் வகுத்து இருந்தோம் என, கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளி, அளித்துள்ளார். கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29 பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 12 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது இத்ரீஸ், 34; முகமது அசாருதீன், 27 ஆகியோரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், எட்டு நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் முகமது இத்ரீஸ் அளித்துள்ள வாக்குமூலம்:<br><br>ஜமேஷா முபின், வெடிகுண்டு தயாரிக்க எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள, அரபி கல்லுாரியை எங்கள் பயங்கரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் நடத்துவோம். அங்கு தான் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுத பயிற்சிகள் எடுத்தோம். சமூக வலைதளம் வாயிலாக, ஹிந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துடன் இருக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதை, நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஓராண்டில் ஒரு லட்சம் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிந்து வந்தோம். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது, ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. அது, வெற்றி பெற்று இருந்தால், அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்து இருப்போம். இவ்வாறு, முகமது இத்ரீஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.