சனாதனம் என் கொள்கை; அதற்காக பதவி விலக தயார்
2 ஐப்பசி 2023 திங்கள் 09:49 | பார்வைகள் : 3324
நடிகர் சிவாஜிகணேசனின், 96வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது படத்திற்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவின் தலைவர் சந்திரசேகர், மலர் துாவி மரியாதை செலுத்தினார். <br><br>விழாவில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேசியதாவது: சிவாஜி நடித்த முதல் மரியாதை படத்தை, 100 தடவை பார்த்தேன். எந்த காட்சியிலும் அவர் நடிக்கவில்லை; வாழ்ந்திருந்தார். தமிழக காங்கிரசின் உயிர்நாடியாக சிவாஜி திகழ்ந்தார். எந்த சக்தியாலும் மறுக்க முடியாது. காந்தி, நேரு, காமராஜரை எல்லாம் சிவாஜி நேசித்தார். எதிரி அல்ல தேர்தல் பிரசார கூட்டத்தில், காமராஜருக்கு அருகில் அமர சிவாஜிக்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது. சிவாஜியோ, தன் ரசிகர்கள் தீவிரமாக பணியாற்ற, காமராஜர் காலின் கீழே அமர்ந்தார். சனாதனம் ஹிந்து மதத்திற்கு எதிரி அல்ல; 25 ஆண்டுகளாக, சனாதனம் குறித்து நான் பேசுகிறேன். சிலர் என்னிடம், சனாதனம் குறித்து பேசாதீர்கள் என்றனர். அது என் கொள்கை, என்னால் பேசாமல் இருக்க முடியாது. நான் வேண்டுமானால் வெளியேறுகிறேன். வேறு ஆளை போடுங்கள் என்று கூறிவிட்டேன். ஹிந்து மதத்திற்கு நான் எதிரி அல்ல. சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். சுதந்திரம் பெற்றதில் அவர்களின் பங்கை குறைத்து சொல்ல முடியாது. மாற்றம் வரும் கடந்த, 1967ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தோம். மீண்டும் அந்த ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். 2024 லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின், பல்வேறு அரசியல் மாற்றங்கள் வரும். இவ்வாறு அழகிரி பேசினார். காங்கிரசில் சேர பிரபுவுக்கு அழைப்புதமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''சிவாஜி நடித்த மிருதங்க சக்கரவர்த்தி படத்தை, எம்.ஜி.ஆர்., பார்த்து விட்டு, சிவாஜியைப் போல சிறந்த நடிகர் யாரும் இல்லை என்று பாராட்டினார். நடிகர் பிரபு எந்த கட்சியும் சாராதவராக இருக்கிறார். சிவாஜியின் குடும்ப உறுப்பினர்கள் காங்கிரசில் சேர வேண்டும்,'' என்றார்.