Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் இல் முதல் நாளே அதிரடியாக வெளியேற்றப்பட்ட 6 போட்டியாளர்கள்

பிக்பாஸ் இல் முதல் நாளே அதிரடியாக வெளியேற்றப்பட்ட 6 போட்டியாளர்கள்

2 ஐப்பசி 2023 திங்கள் 08:21 | பார்வைகள் : 3081


பிக்பாஸ் 7-வது சீசன் நேற்று அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை முன்னதாகவே ப்ரமோவில் கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் நாளான இன்று முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த வார கேப்டனான விஜய் வர்மாவை அதிகம் ஈர்க்காதவர்கள் என்று, ஐஷு, நிக்ஸன், எழுத்தாளர் பவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகிய ஆறு பேரும் இரண்டாவது வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டிற்குள் சென்ற ஆறு பேரும் எந்த காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் அந்த வீட்டை விட்டு மற்ற 12 போட்டியாளர்கள் இருக்கும் வீட்டிற்குள் வரும்போது தான் பிக்பாஸ் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்