நுரையீரல் புற்றுநோய் உட்பட பல சுவாச நோய்களுக்கு காரணம் பரிசின் நிலக்கீழ் தொடரூந்துகள். "Vert de rage" அமைப்பு.
2 ஐப்பசி 2023 திங்கள் 08:36 | பார்வைகள் : 4478
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதனை அண்டியுள்ள நகரங்களில் பயணிக்கும் தொடரூந்துகள் 'RER', நிலக்கீழ் தொடரூந்துகள் Métro' போன்ற 332 நிலையங்களில் இருந்து வெளியாகும் மிகமிக நுண்ணிய தூசுத் தவள்கள் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தான நோய்களை விளைவிக்கிறது என "Vert de rage' எனும் அமைப்பு தனது நீண்ட ஆய்வின் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு கன மீட்டர் காற்றில் (μg/m3) 10.5 மைக்ரோகிராம் நுண்ணிய துகள்களின் செறிவு உள்ளது எனவும் இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவைவிட இரண்டு மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மிகமிக நுண்ணிய தூசுத் தவள்கள் மனிதர்கள் சுவாசிக்கும் போது மூச்சு காற்று வழி உள்ளே நுழைந்து இதயம், இரத்தம், மூளை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் படிகிறது என தெரிவிக்கும் "Vert de rage' இவை நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களில் மட்டும் அன்றி 300 (bouches d'aération) நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களில் இருந்து அசுத்தமான காற்றை வெளியேற்றும் இயக்கத்தின் மூலம் வெளியே உள்ள காற்றிலும் கலக்கிறது எனவும் தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வறிக்கை குறித்து RATP தொடரூந்து சேவை நிறுவனம் இந்த ஆய்வு குறித்த தாம் வருத்தப்படுவதாகவும், அளவீடுகளின் நம்பகத்தன்மையை தாம் சந்தேகிப்பதாகவும் அறிவித்துள்ளது இருப்பினும், Ile-de-France Mobilités (IDFM), மெட்ரோ மற்றும் RER நிலையங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.