கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது

2 ஐப்பசி 2023 திங்கள் 09:08 | பார்வைகள் : 7680
புறப்படுவதற்கு தயாரா இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த வத்தளை-ஹெந்தல பிரதேசத்தைச் சே்ந்த எச்.பீ.சுதாகர் இந்திரஜித் என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா கட்டளையிட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் இரகசியமாக உள்நுழைந்த நபர், ஜப்பானை நோக்கி பயணிக்க விருந்த விமானத்துக்குள் ஏறியே இவ்வாறு பயணிக்க விருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.
சந்தேகநபர் ஜப்பானில் தொழில்புரிந்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பியுள்ளார். ஜப்பானுக்கு மீண்டும் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், ஜப்பானுக்குச் செல்வதற்கான எந்தவோர் ஆவணமும் சந்தேகநபரிடம் இல்லையென நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025