Paristamil Navigation Paristamil advert login

திராவிட உணர்வு செத்து போச்சா? : சீமான் கேள்வி

திராவிட உணர்வு செத்து போச்சா? : சீமான் கேள்வி

2 ஐப்பசி 2023 திங்கள் 16:39 | பார்வைகள் : 3328


இந்தியர் என்ற உணர்வில் கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். ஏன் திராவிட உணர்வு செத்து போச்சா? தமிழகத்தில் மட்டும்தான் திராவிடரா?" என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்று என்ன செய்ய போகிறீர்கள்? 

ஆணைய உத்தரவில் தலையிட முடியாது என அவர்களே கூறிவிட்டார்களே. காவிரி பிரச்னை தீரக்கூடாது, கச்சத்தீவு மீட்கப்பட கூடாது என இருக்கின்றனர். 

இதெல்லாம் இருந்தால் தான் இவர்களுக்கு (திமுக.,வுக்கு) அரசியல். கர்நாடகாவில் ஆட்சி செய்யும் காங்கிரசோ, முன்பு இருந்த பா.ஜ.,வோ தேசிய கட்சியாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் மட்டும் மாநில கட்சியாக ஏன் மாறிவிடுகிறது? 

தமிழக அமைச்சர் துரைமுருகன், இந்தியர் என்ற உணர்வில் கர்நாடகா தண்ணீர் தர வேண்டும் என பேசுகிறார். 

ஏன் திராவிட உணர்வு செத்து போச்சா? தமிழகத்தில் மட்டும்தான் திராவிடரா? தமிழர், கன்னடர், மலையாளி, தெலுங்கர் என அனைவரும் திராவிடர் என நீங்கள் தானே சொன்னீர்கள். 

அங்கு திராவிட சகோதரனை அடிக்கிறான், ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்கிறான். தேசப்பற்று, இறையான்மை, ஒருமைப்பாடு பற்றி பேசும் மக்கள், இந்த நேரத்தில் வாய் திறக்க வேண்டும். 

நாட்டின் வளங்கள் அந்நாட்டு மக்களுக்கு பொதுமை என இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்