Paristamil Navigation Paristamil advert login

tickets-restaurant இனி தாள்களில் இல்லை, உணவகங்கள் தவிர ஏனைய இடங்களுக்கு tickets-restaurant பாவிக் முடியாது.

tickets-restaurant இனி தாள்களில் இல்லை, உணவகங்கள் தவிர ஏனைய இடங்களுக்கு tickets-restaurant பாவிக் முடியாது.

2 ஐப்பசி 2023 திங்கள் 13:37 | பார்வைகள் : 4400



சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், வர்த்தகம், கைவினை முயற்சி, சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் Olivia Grégoire இன்று tickets-restaurant இனி தாள்களில் இல்லை எனவும் உணவகங்கள் தவிர ஏனைய இடங்களுக்கு tickets-restaurant பாவிக் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கு முன்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், ticket restaurant தாள்களில் அச்சிடுவதை படிப்படியாக குறைத்து விட்டு numérique முறையில் வடிவமைக்கும் செயல் திட்டம் விரைவுபடுத்த படும் எனவும், இதனால் உணவகங்கள் ticket restaurant க்கு வங்கிகளில் செலுத்தும் வரியை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த கட்டமாக  ticket restaurant பாவனை உணவகங்களுக்கு மட்டுமே செலுத்த முடியும் எனவும், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளில் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்ய செலுத்த முடியாதபடி புதிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் முழுவதும் சுமார் ஐந்து மில்லியன் ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் ticket restaurant வழங்கிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசு ticket restaurant மூலம் உணவகங்களுக்கு பணம் செலுத்துவதை வார நாட்களில் மட்டும் செலுத்த முடியும் எனவும், விடுமுறை நாட்களில் செலுத்த முடியாது எனவும் அறிவித்து இருந்ததமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்