அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் சேவை மீள ஆரம்பம்

12 ஆடி 2023 புதன் 09:27 | பார்வைகள் : 10603
அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.
இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவைகளுக்கான ஆசன முற்பதிவுகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1