Paristamil Navigation Paristamil advert login

பாப்பரசர் வந்து போனதால் கடனில் சிக்கிய Marseille மறைமாவட்டம்.

பாப்பரசர் வந்து போனதால் கடனில் சிக்கிய Marseille மறைமாவட்டம்.

5 ஐப்பசி 2023 வியாழன் 07:44 | பார்வைகள் : 4166


கடந்த செப்டம்பர் மாதம் 22ம்,23ம் திகதிகளில் பாப்பரசர் François அவர்கள் பிரான்சின் Marseille மறைமாவட்டத்திற்கு கிறிஸ்தவ சமயம் சார்ந்த விடயமாக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு இருந்தார். 23ம் திகதி சனிக்கிழமை Vélodrome மைதானத்தில் 60.000 மேற்பட்ட மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான திருப்பலியும் அங்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பாப்பரசரின் இரண்டு நாள் பயணத்திற்காக Marseille மறைமாவட்டம் 2.5 மில்லியன் euros பணத்தை செலவு செய்திருந்தது. குறித்த தொகையின் அரைவாசி அதாவது 1.2 மில்லியன் euros பணத்தை  ஏனைய மறைமாவட்டங்களிடம் இருந்தும்,  நன்கொடையாளர்களிடம் இருந்தும் Marseille மறைமாவட்டம் பெற்றுக்கொண்டது. 600.000 euros பணம் பக்தர்களிடம் இருந்தும், ஏனைய பொருட்கள் விற்பனை மூலமும் மறைமாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றது.

இப்போது செலவு செய்யப்பட்ட பணத்திற்கு 500.000 euros மறைமாவட்டத்திற்கு கடனாக உள்ளது. இந்த கடன் தொகை பணத்தை மறைமாவட்டம் நன்கொடையாக கேட்டு நிற்கிறது.

பாப்பரசர் பிரான்சுக்கு வருவதற்கு முன்பு பிரித்தானிய மன்னர் Charles III பிரான்சுக்கு வருகைதந்திருந்தார், அதன் போது பாப்பரசருக்கு செலவான தொகையை விட பலமடங்கு அதிகமான பணம் செலவானது. அரசு  அந்த செலவை மக்களின் வரிப்பணத்தில் எடுத்துக் கொண்டது, காரணம் மன்னர் Charles III அரசமுறைப் பயணமாக வருகைதந்தார், ஆனால் பாப்பரசர் சமயமுறைப் பயணமாக வருகை தந்ததால் மறைமாவட்டமே செலவைப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்