Paristamil Navigation Paristamil advert login

தெற்கு தைவானை புரட்டிப்போட்ட கொய்னு புயல்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தெற்கு தைவானை புரட்டிப்போட்ட கொய்னு புயல்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

5 ஐப்பசி 2023 வியாழன் 08:34 | பார்வைகள் : 4305


தெற்கு தைவான் நாட்டை கொய்னு புயல் வியாழக்கிழமை   கடந்துள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல நகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொய்னு புயல் காரணமாக 190 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில் இறப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. 

ஜப்பானிய மொழியில் நாய்க்குட்டி என பொருள்படும் கொய்னு புயல் தைவானின் ஹெங்சுன் தீபகற்பத்தில் கரையைக் கடந்துள்ளது.

இதனால் மணிக்கு 156 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. 

ஆனால் தைவான் ஜலசந்தியைக் கடந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் நிலையில் கொய்னு புயல் வலுவிழந்ததாக கூறுகின்றனர்.

இதனிடையே, தெற்கில் உள்ள பிங்டங் மாவட்டத்தில் மலை மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. 

தலைநகர் தைபேவில் பெரும்பாலான நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் வேலை மற்றும் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.

கொய்னு புயல் வியாழன் பகல் தைவான் ஜலசந்திக்குள் நுழைந்த நிலையில், கனமழை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. 

பெரும்பாலும் தீவின் தெற்கு மற்றும் கிழக்கில் கனமழை நீடிக்கும் என்றே கூறுகின்றனர்.

மேலும்  புயல் காரணமாக 46 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் வடக்கு மற்றும் தெற்கு தைவானை இணைக்கும் அதிவேக ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்