மனம் திறந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா!
5 ஐப்பசி 2023 வியாழன் 09:14 | பார்வைகள் : 2966
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று 5.10.2023 இல் தொடங்கி நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் வைத்து நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு முதல் முறையாக கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், என்னைப் பொறுத்தவரை ஒரு வீரர் கேப்டனாக இருப்பதற்கு சரியான நேரம் அவரது 26-27 வயது.
அப்போது தான் அவர் மிகவும் உற்சாகமாக துடிப்பாக இருப்பார்.
ஆனால் எல்லா நேரமும் ஒருவர் விரும்பது அவருக்கு கிடப்பது இல்லை, அது சாத்தியமில்லாத ஒன்று.
இந்திய அணியின் கேப்டனாக பல ஜாம்பவான்கள் இருந்துள்ளனர்.
எனக்கு முன்பாக தோனி, கோலி ஆகியோர் கேப்டனாக இருந்துள்ளனர்.
நான் எனது முறைக்காக காத்து இருக்க வேண்டியிருந்தது.
கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் தலைசிறந்த வீரர்கள், ஆனால் அவர்கள் இந்தியாவின் கேப்டனாக இருந்ததில்லை.
அவர்கள் அனைவரும் மேட்ச் வின்னர்கள், அவர்கள் கேப்டனாக இருந்து இருக்க வேண்டும், ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு நன்றியுடன் இருக்க விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.