100 கிலோ கஞ்சா செடியை சாப்பிட்ட செம்பறி ஆடுகளின் வினோத செயல்....
5 ஐப்பசி 2023 வியாழன் 09:29 | பார்வைகள் : 2021
100 கிலோ கஞ்சா செடியை செம்பறி ஆடுகள் சாப்பிட்டு விட்டு விநோதமாக நடந்து கொண்ட சம்பவம் கிரீஸில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிரீஸ் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கஞ்சா செடியை மருத்துவ நோக்கங்களுக்காக வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த நாட்டில் உள்ள நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகள் இந்த கஞ்சா செடிகளை உட்கொள்ளும் சம்பவங்கள் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.
இந்த கஞ்சா செடிகள் விலங்குகளுக்கும் ஆபத்தானவை என்பதால் இதனை உட்கொண்ட பல விலங்குகள் விஷத்தன்மையால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் கிரீஸ் லிபியா துருக்கி மற்றும் பல்கொரியாவை டேனியல் புயல் தாக்கி பெரும் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது இதனால் பல வளர்ப்பு பிராணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பித்த செம்பரி ஆடுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை பசி மிகுதியில் சாப்பிட்டு உள்ளன.
இதையடுத்து கஞ்சாவை சாப்பிட்ட ஆடுகள் வினோதமாக நடந்து கொண்டுள்ளன.
இதனை கவனித்த ஆடு மேய்ப்பாளர் ஆட்டின் வித்தியாசமான செய்கைகளால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் தெரிவித்த கருத்தில், வெப்ப அலைகளால் பாதி பயிர்கள் அழிந்து விட்டன.
இப்போது ஆடுகள் மீது கஞ்சா செடியை சாப்பிட்டு விட்டன. இதனை நினைத்து சிரிப்பதா அல்லது கவலைப்படுவதா என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.