Paristamil Navigation Paristamil advert login

500 நகர பிதாக்களைச் சந்திக்கும் பிரதமர்!

500 நகர பிதாக்களைச் சந்திக்கும் பிரதமர்!

5 ஐப்பசி 2023 வியாழன் 09:39 | பார்வைகள் : 9187


வன்முறையால் பாதிக்கப்பட்ட நகரங்களைச் சேர்ந்த 500 நகரபிதாக்களை பிரதமர் Elisabeth Borne சந்திக்க உள்ளார்.

இவ்வருடத்தின் ஜூன் மாத இறுதியில் நாடு முழுவதும் பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான Nahel எனும் இளைஞனது சாவுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் இரவு நேரத்தில் பலத்த வன்முறை வெறியாட்டங்கள் இடம்பெற்றன. மகிழுந்துகள் எரிக்கப்பட்டும், பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் இருந்தன. இந்த வன்முறையினால் பாதிக்கப்பட்ட நகரங்களுக்கு இதுவரை இழப்பீடுகள் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை.

இந்நிலையி, இந்த ஒக்டோபர் மாத இறுதியில் அதிகளவில் பாதிக்கப்பட்ட 500 நகரங்களைச் சேர்ந்த நகரபிதாக்களை பிரதமர் Elisabeth Borne சந்திக்க உள்ளதாக அறிய முடிகிறது. 

முன்னதாக ஜூலை மாதத்தில் 300 நகரபிதாக்களை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரது எலிசே மாளிகையில் வைத்து சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்