Le mont Blanc மலையின் உயரம் குறைந்தது - புதிய உயரம் அறிவிப்பு

5 ஐப்பசி 2023 வியாழன் 14:02 | பார்வைகள் : 8406
‘வெள்ளை மலை’ என அழைக்கப்படும் Le mont Blanc மலை உயரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய உயரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அளவீடின் படி தற்போது Le mont Blanc மலை 4,805.59 மீற்றர் உயரமுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மீற்றருக்கும் அதிகமாக உருகி உயரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அளவீடின் படி 4,807.81 மீற்றர் உயரம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Le mont Blanc மலையின் உயரமானது தட்பவெப்ப நிலைக்கு ஏற்றால் போல் ஆண்டுதோறும் மாற்றத்துக்கு உள்ளாகிறது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அளவீட்டில் 4,806.03 மீற்றர் உயரம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.